நந்தி சிலை மீது நின்று சிவனை தரிசித்த நாகம் - பக்தியில் திளைத்த பொதுமக்கள்! - snake
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை கிராமத்தில் அருள் நிறை ஸ்ரீ சுயம்பு பிரம்ம புரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும், நினைத்த காரியம் நடைபெறும் கோயிலாகவும் திகழ்கிறது. மேலும், இந்த கோயிலில் மூலவராக சிவபெருமான் காட்சி அளிக்கிறார்.
இந்த நிலையில், ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று (ஆகஸ்ட் 11) சிவபெருமானுக்கு மாவுப்பொடி, திரவியப்பொடி, பன்னீர், சந்தனம், குங்குமம் கொண்டு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
அப்பொழுது, கோயில் வளாகத்தில் உள்ள நந்தி சிலையின் மீது நாகம் ஒன்று நீண்ட நேரமாக படமெடுத்தபடியே இருந்தது. இந்த நிலையில் கோயிலில் பணியாற்றும் பூசாரிகள், நாகத்திற்கு கற்பூர தீப ஆராதனை நடத்தினர்.
மேலும், சிவன் கோயிலில் உள்ள நந்தி சிலையின் மீது நாகம் படமெடுத்தபடி இருந்த நிகழ்வு, அப்பகுதியில் காட்டுத்தீபோல் பரவியது. இதனையடுத்து, கோயிலுக்கு வந்த பொதுமக்கள் நந்தி சிலையின் மீது படமெடுத்தபடி இருந்த நாகத்தை பக்தி பரசவத்துடன் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.