சைலண்ட் மோடில் செல்போன் கடைக்குள் புகுந்த சாரைப்பாம்பு!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் செல்போன் கடைகள், தேநீர் கடைகள் மற்றும் உணவகங்கள் போன்ற கடைகள் உள்ளன. எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் இடமாக இப்பேருந்து நிலையம் உள்ளது. இந்த நிலையில், நேற்று (மே 17) மாலை பேருந்து நிலையத்தில் இருந்த செல்போன் கடைக்குள் புகுந்த சுமார் 5 அடி நீள சாரைப்பாம்பு, செல்போன் கடையில் இருந்த ரேக் வழியாக ஊர்ந்து, கடையில் அமர்ந்திருந்த பணியாளரின் கைக்கு இடையில் சென்று கால் அருகே நெளிந்துள்ளது.
அப்போது சுதாரித்துக் கொண்ட பணியாளர், பாம்பை பார்த்ததும் அதிர்ச்சியில் தலை தெறிக்க கடையில் இருந்து வெளியே ஓடி உள்ளார். இதனையடுத்து, அதே அதிர்ச்சியில் அந்த பாம்பும் செல்போன் கடைக்குள் இருந்த ஓட்டை வழியாக வெளியே சென்றுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதற்கு, பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும் என்பதை விட, கடையே நடுங்கும் என்றும், மொபைலை மட்டுமே பார்த்தபடி நடப்பவர்களுக்கு இது ஒரு முன்மாதிரி என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.