கேக் தொழிற்சாலைக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பு; பத்திரமாக மீட்ட ஸ்நேக் அமீன்! - பத்திரமாக மீட்ட ஸ்நேக் அமீன்
🎬 Watch Now: Feature Video
Published : Dec 17, 2023, 5:09 PM IST
கோயம்புத்தூர்: கோவை விமான நிலையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி பின்புறத்தில் கேக் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், வட மாநிலத்தவர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், தொழிற்சாலைக்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை அறிந்த அங்கிருந்த ஊழியர்கள் பாம்பு பிடி வீரரான ஸ்நேக் அமீனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று ஸ்நேக் அமீன் பார்த்தபோது, தொழிற்சாலைக்குள் புகுந்த பாம்பு விஷத்தன்மை நிறைந்த 5 அடி கண்ணாடிவிரியன் பாம்பு என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து, பல்வேறு முன்னேற்பாடுகளுடன் தொழிற்சாலைக்குள் நுழைந்த பாம்பை பத்திரமாக பிடித்த ஸ்நேக் அமீன் அதனை பத்திரமாக சாக்குப்பைக்குள் அடைத்து கோயம்புத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த பாம்பு காட்டுக்குள் விடப்பட்டது.
இது குறித்து பாம்பு பிடி வீரரான் ஸ்நேக் அமீன் கூறுகையில், “கண்ணாடி விரியன் பாம்புகள், மலைப்பாம்புகள் போல் இருப்பதனால் மக்கள் அறியாமல் இதனை பிடிக்க முற்படுகின்றனர். இந்த வகை பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டவை என்பதனால் பொதுமக்கள் இந்த வகை பாம்புகளைத் தாமாக பிடிக்க வேண்டாம். பாம்பு பிடி வீரர்கள், தீயணைப்புத்துறையினர் அல்லது வனத்துறையினர் ஆகியோரின் உதவி இல்லாமல் இருப்பிடத்திற்குள் புகும் பாம்புகளை பிடிக்க முற்பட வேண்டாம்" என அறிவுறுத்தினார்.