கும்பேஸ்வரன் கோயிலில் ஆனி மாத சனி மகா பிரதோஷ விழா.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

🎬 Watch Now: Feature Video

thumbnail

தஞ்சாவூர்: கும்பகோணம் கும்பஸ்வரன் கோயில் ஆனி மாத மகா பிரதேஷ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் முதன்மையான திருத்தலமாக விளங்கும் கும்பகோணம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (ஜூலை 1) ஆனி மாத வளர்பிறை சனி மகா பிரதோஷம் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்த பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை பிரதோஷ காலத்தில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள நந்தியம் பெருமானுக்கு நல்லெண்ணெய், திரவியப்பொடி, மாப்பொடி, மஞ்சள்பொடி, தேன், பால், தயிர்,சந்தனம், உள்ளிட்ட பலவிதமான நறுமண பொருட்களால் விசேஷ அபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், நந்தியம் பெருமானுக்கு புது வஸ்திரம், மலர் மாலைகள் சாற்றி அலங்கரிக்கப்பட்டு, அலங்கார தீபாரதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது. மேலும், நடராஜர் சந்நிதி, மூலவர் சந்நிதி மற்றும் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகை ஆகியோருக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. இந்த பிரதோஷ வழிபாட்டில், ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:கொங்கு மண்டலத்தில் மாநாடு: விரைவில் தேதி அறிவிக்கப்படும் - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.