5 வீடுகளில் சீரியல் திருட்டு: வேலூர் பேங்க் நகர் மக்கள் அச்சம்! - அலமேலு மங்காபுரம்
🎬 Watch Now: Feature Video
வேலூர்: வேலூர் மாவட்டம், அலமேலு மங்காபுரத்தில் பேங்க் நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கிருந்து சில அடி தூரங்களில் சத்துவாச்சாரி காவல் நிலையம் உள்ளது. இந்நிலையில் இன்று (ஜூலை 13) அதிகாலை அப்பகுதியில் உள்ள 5 வீடுகளில், மர்ம நபர்கள் புகுந்து, பூட்டை உடைத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஸ்ரீவட்சன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து, ஒரு சவரன் தங்கநகை, வெள்ளிப் பொருட்களையும் திருடியதாக கூறப்படுகிறது. குப்பன் என்பவர், வீட்டில் ஹீரோஹோண்டா இருசக்கர வாகனத்தையும் திருடி எடுத்துச்சென்றுள்ளனர். மேலும், அதே பகுதியில் தேன்மொழி, மோகனப் பிரியா, டாக்டர் மிதின் ஆகியோர் வீடுகளிலும் திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பேங்க் நகர் பகுதியில் ஐந்து வீடுகளில் திருடு போன சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இந்த துணிகரச் சம்பவம் நடைபெறுவதால் இரவு நேரங்களில் காவல்துறையினர், அப்பகுகளில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும், மேலும் சிசிடிவி கேமராவை பொருத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.