தனியார் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்... விநாயகர் வேடமணிந்து 108 மாணவர்கள் அசத்தல்! - Ganesh Chaturthi
🎬 Watch Now: Feature Video
Published : Sep 18, 2023, 1:11 PM IST
தேனி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேனியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் பல்வேறு விநாயகர் வேடங்கள் தரித்தது காண்போரை கவர்ந்தது.
விநாயகர் சதுர்த்தி இன்று (செப். 18) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளிலும், தெருக்களிலும் பொது மக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு ஆலயங்களுக்கு சென்று விநாயக பெருமானை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேனியில் உள்ள தனியார் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
108 மாணவர்கள் விநாயகர் வேடமிட்டு பல்வேறு கோணங்களில் காட்சி அளித்தனர். விநாயகர் மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்து செல்வது போல் சென்றும் அதன் பின்னால் 108 மாணவர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து சென்றதும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் பள்ளி வளாகத்தில், ஓம் மற்றும் ஸ்வஸ்திக் வடிவத்தில் விநாயகர் அமர்ந்து இருந்து போன்று மாணவர்கள் ஒன்றிணைந்து தத்ரூபமாக காட்சிப்படுத்தினர். தற்போது இந்த நிகழ்வின் கழுகு பார்வை காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.