சங்கடஹர சதுர்த்தி: தேனியில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை! - விநாயகர் சிறப்பு பூஜை
🎬 Watch Now: Feature Video
Published : Dec 1, 2023, 9:11 AM IST
தேனி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள விநாயகர் கோயில்களில் நேற்று (நவ.30) விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி நகர் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பெத்தாட்சி விநாயகர் திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக, ஆலய மூலவரான பெத்தாட்சி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, விநாயகருக்கு அருகம்புல் மலர் மாலைகளாலும், வண்ண மலர் மாலைகளாலும் வஸ்திரம் கட்டி சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது.
பின்னர், அலங்கரிக்கப்பட்டிருந்த விநாயகருக்கு மகா தீபாராதனை மற்றும் பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது
இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தைக் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.