விழா மேடையில் காலணியை கழட்டி வைத்து வந்த விவசாயியை கண்டித்த எம்எல்ஏ... பொதுமக்கள் பாராட்டு!!
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பயம் தனியார் திருமண மண்டபத்தில், குறுவை சாகுபடி செய்து உள்ள விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூலை 12) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். அந்த நேரத்தில், விவசாயி ஒருவர் தான் அணிந்து இருந்த காலணியை கழட்டி வைத்து விட்டு இடுபொருள் வாங்குவதற்காக மேடைக்கு வந்தார். இதனைக் கண்ட கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், இடுபொருட்களை பெற வந்த அந்த விவசாயிடம் ‘காலணிகள் அணிந்து வந்தால்தான் இந்த ஆணையை வழங்குவேன்’ என கூறி உள்ளார்.
மேலும், இது போன்ற சம்பிரதாயங்களை மாற்றுங்கள் என்றும், அவர் அப்போது தெரிவித்து உள்ளார். இதனைக் கண்ட அந்த இடு பொருட்கள் விழாவிற்கு வந்த அனைவரும் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனை வெகுவாக பாராட்டினர். இந்த நிகழ்வில், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட பயனாளிகள் கலந்து கொண்டனர்.