ஆம்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணி - பாதுகாப்பு பணியில் 601 காவலர்கள்! - RSS Rally at Ambur
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: ஆம்பூரில் ராஷ்ட்டிரிய ஸ்வயம் சேவகசங்கத்தின் சார்பில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைப்பெற்றது. பேரணிக்கு முன்னதாக ராஷ்ட்டிரிய ஸ்வயம் சங்கத்தினர் ராஷ்ட்டிரிய கொடியேற்றி உறுதி மொழியேற்றனர். பின்னர் பெண்கள் மலர் தூவி பேரணியை தொடங்கி வைத்தனர். ஆம்பூர் புறவழிச்சாலையில் தொடங்கிய இந்த பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் புறவழிச்சாலையிலேயே முடிவடைந்தது.
இந்த பேரணிக்கு பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில்
1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 5 டிஎஸ்பிக்கள், 23 ஆய்வாளர்கள், 63 உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 601 காவலர்கள் பாதுகாப்பு பணியில் தற்போது ஈடுபட்டனர்.
ஆம்பூரில் ஆர்எஸ்எஸ் பேரணி செல்லும் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் உள்ள 3 டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்ட நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்பட்டது.
இதையும் படிங்க: காலில் விழுந்து பதவிபெற்று காலை வாரும் கலையைக் கற்றவர் - பாஜகவினர் விமர்சனத்தால் கொதித்த அதிமுகவினர்