Video: வங்கியைப் பூட்டாமல் சென்ற அதிகாரிகள்... இரவில் திறந்துகிடந்த அவலம் - ராமநாதபுரத்தில் நடந்தது என்ன? - Pottagavayal ramanathapuram
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொட்டகவயல் என்னும் கிராமத்தில் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பொட்டகவயல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சார்ந்த ஏராளமானோர் தங்களது பணம் மற்றும் நகைகளை டெபாசிட் செய்துள்ளனர். அதிலும், சிலர் நகைகளை லாக்கரிலும், அடகும் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று வழக்கம்போல்(ஜூலை 1) வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர். ஆனால், பணி நேரம் முடிந்த பின்னர், வங்கியைப் பூட்டாமலேயே சென்றுள்ளனர். இதனையடுத்து, இரவு 9 மணியளவில் அந்தப் பகுதியில் சென்றவர்கள், வங்கியின் கதவு பூட்டாமல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.
பின்னர், பல மணி நேரத்திற்குப் பிறகு அதிகாரிகள் சென்று வங்கியைப் பூட்டி உள்ளனர். இந்தச் சம்பவம், வங்கி வாடிக்கையாளர்கள் உள்பட பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வங்கியின் கதவுகளை பூட்டாமல் சென்ற ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.