புதுச்சேரி முதலமைச்சரின் பிறந்தநாள் விளம்பர பேனர் சரிந்து விழுந்து 3 பேர் காயம்! - CM Rangaswamy Birthday Banner collapsed
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி : முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாள் கடந்த ஆகஸ்ட் 4 ம் தேதி கொண்டாடப்பட்டது. இதற்காக புதுச்சேரி முழுவதும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில் குடியரசு தலைவரின் வருகையையொட்டி பேனர்கள் அகற்றப்பட்டன.
ஆனால் கதிர்காமம் தொகுதியில் வைக்கப்பட்ட முதலமைச்சரின் பேனர்கள் அகற்றப்படவில்லை. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 7) இரவு வழுதாவூர் சாலை அரசு மருத்துவக்கல்லூரி அருகே வைக்கப்பட்ட விளம்பர வளைவு சரிந்து அவ்வழியே சென்ற மூன்று பேர் மீது விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் மூன்று நபர்களும் காயம் அடைந்தனர்.
அவர்கள் உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து அரைமணி நேரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது போன்ற ஆபத்துக்குரிய பேனர் சரிந்து விழும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் பல பகுதியில் பலர் உயிரிழந்த நிலையில், சிலர் படுகாயங்களும் அடைந்து உள்ளனர். இந்நிலையில், பேனர் தடை சட்டத்தை உடன் அமல்படுத்த வேண்டும் என்ற் கோரிக்கை வலுத்து உள்ளது.