சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அஞ்சலி!
🎬 Watch Now: Feature Video
Published : Dec 26, 2023, 4:31 PM IST
புதுச்சேரி: 19ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை ஒட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் சுனாமியால் உயிர்நீத்தவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரி அரசு மீன்வளத்துறை சார்பில் 19ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம், புதுச்சேரி கடற்கரையில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, சுனாமிப் பேரலையால் உயிரிழந்தவர்களின் நினைவாக கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலகம் அருகே அஞ்சலி செலுத்தினார். இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ வைத்தியநாதன் உள்பட மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமங்களிலும் மீனவப் பஞ்சாயத்து மற்றும் மீனவ அமைப்புகள் சார்பிலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. சுனாமி நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அவர்களது படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.