'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' இயக்குநர் மீது பெள்ளி பரபரப்பு புகார்.. ஈடிவி பாரத் பேட்டியில் கூறியது என்ன? - coimbatore news
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள்கள் பயணமாக இன்று (ஆகஸ்ட் 5) தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். இன்று காலை சுமார் 11:30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட திரௌபதி முர்மு மைசூரு சென்று, அங்கிருந்து தனி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மாலை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழமையான யானைகள் முகாமிற்கு வந்தடைந்தார்.
அங்கு உள்ள வளர்ப்பு யானைகளையும், யானைகளுக்கு உணவளிப்பதையும், ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவணப்படத்தில் நடித்த ரகு மற்றும் பொம்மி யானைகளையும், அதன் பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளி தம்பதியினரையும் சந்திதார்.
அதை தொடர்ந்து ஈடிவி பாரத்திற்கு பிரத்தேயகமாக பராமரிப்பாளர் பொம்மன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதுமலைக்கு வந்து அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக குடியரசு தலைவர் கூறினார். இங்கு வாழும் மக்களுக்கும் வீடு வசதி செய்து தரப்படும் எனவும் மாணவர்களுக்கு பள்ளிக் கூடம் கட்டித்தரப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்” என்றார்.
தொடர்ந்து பெள்ளியிடம் ஆவணப்படத்திற்கான பணம் தொடர்பாக செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, சற்று வேதனையுடன் பேசிய பெள்ளி, ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் நான் செல்போனில் அழைத்தால் எடுப்பதில்லை எனவும், அவர் கொடுக்கும் பணத்திற்காக காத்திருக்கவில்லை, அவர் குறித்து பேசவிரும்பவில்லை என விரக்தியுடன் கூறினார்.