செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா! - tenkasi news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 9:38 AM IST

தென்காசி: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா, இன்னும் சில தினங்களில் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு, அனைவருக்குமான சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா கலந்து கொண்டார். 

செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், அனைத்து பணியாளர்களுக்கும் தனது சொந்த செலவில் புத்தாடைகள், மதிய விருந்து வழங்கினார். மேலும், பொங்கல் பண்டிகைyai முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.

இந்த சமத்துவப் பொங்கல் விழாவில் செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் விளையாட்டு மற்றும் அறிவுத்திறன் போட்டியில் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர். போட்டியில் வென்றவர்களுக்கு இணை இயக்குனர் பிரேமலதா பரிசுகளை வழங்கினார். அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கும் விழாவில், மருத்துவ திட்ட அலுவலர் கார்த்திக் அறிவுடை நம்பி உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.