பிரமாண்டமாக நடைபெற்ற கரூர் மாவட்ட காவல்துறையின் பொங்கல் திருவிழா! - கரூர் டி எஸ் பி பிர்பாகரன்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/18-01-2024/640-480-20534791-thumbnail-16x9-karur.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jan 18, 2024, 8:09 AM IST
கரூர்: கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொங்கல் விழா, கடந்த ஜனவரி 15ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் துறையைச் சார்ந்த காவலர்கள் பலர் வருகை தந்திருந்தனர். முன்னதாக, மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த மாதிரி குடிசை முன்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகரன் தலைமையில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைக்கும் போட்டி, இசை நாற்காலி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மேலும், விழா மேடையில் பரதநாட்டியம், குச்சிப்புடி நடனம், முருகன் பாடல், திரைப்படப் பாடல்கள் என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர், இரவு 10 மணி வரை திரைப்படப் பின்னணி பாடகர் சின்னப்பொண்ணு குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, திருச்சி மத்திய சரக ஐஜி கார்த்திகேயன், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், தலைமை நீதிபதிகள் சண்முகசுந்தரம், சுஜிதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும், போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.