வேலப்பன்சாவடியில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா; மாணவர்கள் கோலாகல கொண்டாட்டம்! - சென்னை செய்திகள்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 12, 2024, 2:10 PM IST
சென்னை: வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் குத்தாட்டம் போட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு உற்சாகமாக சமத்துவப் பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு மாணவிகள் சேலையிலும், மாணவர்கள் வேட்டி சட்டையிலும் என பாரம்பரிய உடை அணிந்து வந்து அசத்தினர். அதேபோல், மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர்கள், செவிலியர்கள் என ஒரே நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் குவிந்து, கல்லூரி வளாகத்தில் குத்தாட்டம் போட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.
முன்னதாக, விழாவை கல்லூரி நிறுவனர் ஏ.சி.சண்முகம் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல் மாணவர்களுக்காக குச்சி மிட்டாய், பப்பர மிட்டாய், பஞ்சு மிட்டாய், வாட்ச் மிட்டாய் என விதவிதமாக வைக்கப்பட்டிருந்த திண்பண்டங்களை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, மாட்டு வண்டி ரெய்டு சென்று உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.