தீபாவளி கொண்டாட்டம் கோலாகலம்.. சாத்தனூர் அணையில் குவிந்த மக்கள்! - tourist places
🎬 Watch Now: Feature Video
Published : Nov 12, 2023, 4:40 PM IST
திருவண்ணாமலை: தீபாவளி பண்டிகையானது இன்று (நவ.12) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளுக்காக வருடம் முழுவதும் காத்திருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தங்கள் மகிழ்ச்சியை பட்டாசு மற்றும் இனிப்புகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையில், பல சுற்றுலாத் தலங்களுக்கும் மக்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் குவிந்து வரும் மக்கள், தங்கள் மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கக் கூடிய சாத்தனூர் அணையில் ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளில் குடும்பத்துடன் பொதுமக்கள் குவிந்து, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது வழக்கம்.
எனவே, இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீச்சல் குளம், படகு சவாரி, ஊஞ்சல், நீர்வீழ்ச்சி, முதலைப் பண்ணை ஆகியவற்றில் குடும்பத்துடன் மக்கள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். மேலும், இன்று பண்டிகை நாள் என்பதால், மக்கள் கூட்டம் காலை முதலே குறைவின்றி அதிகரித்த வண்ணம் உள்ளது.