பழனி ரோப்கார் பராமரிப்பு பணிகள் நிறைவு..! பஞ்சாமிர்த பெட்டிகளை வைத்து சோதனை ஓட்டம்! - சோதனை ஓட்டம்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 7, 2023, 8:55 PM IST
திண்டுக்கல்: பழனி கோயிலில் உள்ள ரோப் கார்களின் பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் பஞ்சாமிர்த பெட்டிகள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் செல்லும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் மூலமாக மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.
அந்தவகையில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு ரோப் கார் சேவை வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டது. பின்னர் ரோப் கார்களில் புதிய கம்பி வடம், சாப்டுகள், உருளைகள் ஆகியவை பொருத்தப்பட்டு, ரோப் காரின் பெட்டிகளுக்கு வர்ணம் பூசுப்பட்டு பராமரிப்பு பணிகளள் நடைபெற்றன. இந்நிலையில், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன.
இதனை அடுத்து ரோப்காரில், பஞ்சாமிர்த பெட்டிகளை வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் ஐ.ஐ.டி குழுவினர் ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்த பின் ஒரு சில தினங்களில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப் கார் சேவை கொண்டு வரப்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.