பழனி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்.. விடுமுறை தினத்தால் குவிந்த பக்தர்கள்! - முருகன் கோயில்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 7, 2024, 4:38 PM IST
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மார்கழி மாதம், ஐயப்ப பக்தர்கள், ஞாயிறு விடுமுறை, பாதயாத்திரை பக்தர்கள் என இன்று (ஜன.07) ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையம், இலவச தரிசனம், சிறப்பு வழி கட்டண வரிசைகள் என சுமார் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று (ஜன.07) கோயில் நிர்வாகம் சார்பில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக் கோயிலுக்குச் செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கிச் செல்லவும் என ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, வருகிற ஜனவரி 19ஆம் தேதி தைப்பூசம் கொடியேற்றம் துவங்கி, 28ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், வெளியூரிலிருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக பாதயாத்திரையாக அலகு குத்தி, காவடி எடுத்து கிரிவலப் பாதையில் ஆடி பாடி வருகின்றனர். எனவே, கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும், பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்படுவதால், ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.