குதிரையேற்றம், ஜிம்னாஸ்டிக்ஸ் உடன் கோலாகலமாக நடந்த ஊட்டி சர்வதேச பள்ளி நிறுவனர் விழா! - நீலகிரி மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-10-2023/640-480-19793155-thumbnail-16x9-nil.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Oct 17, 2023, 11:10 PM IST
ஊட்டி: உதகை சர்வதேச பள்ளியின் (ooty international school) 47-வது நிறுவனர் தின விழா கோலாகலமாய் நடைபெற்றது. மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள சர்வதேச பள்ளியில் பல நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து இப்பள்ளியில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் ஆண்டு விழா இன்று நடத்தப்பட்டது
இப்பள்ளி வளாகத்தில் வண்ணமயமாய் நடந்த விழா நிகழ்ச்சியில் உலகளாவிய வியூக நிபுணர் சங்கீத் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு அண்ணு சங்கீத் கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்
நிகழ்ச்சியில் இடம் பெற்ற, மாணவர்களின் அணிவகுப்பு, பேண்டு வாத்தியம், குதிரையேற்ற பயிற்சி, ஜிம்னாஸ்டிக்ஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த இனிய நிகழ்வில் இணை நிறுவனர் எல்சம்மா தாமஸ், தலைவர் ஜேக்கப் தாமஸ், மூத்த துணைத் தலைவர் சாரா ஜேக்கப், முதல்வர் ஷீலா அலெக்சாண்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: நீலகிரி வரையாடு திட்டத்தினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!