புத்தாண்டை முன்னிட்டு ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை..
🎬 Watch Now: Feature Video
Published : Jan 1, 2024, 7:09 PM IST
கோயம்புத்தூர்: தமிழ்நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு 2024 விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் பட்டாசுகள் வெடித்தும், கோயில்களில் வழிபாடு நடத்தியும் பிரார்த்தனையில் ஈடுபட்டும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் இன்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோயில். உலகப் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாசாணி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் கோயிலில் குவிந்தனர்.
இதனால் கோவில் நிர்வாகத்தின் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக தனித்தனியாக கவுன்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.