கோவையில் 18 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் - ஏன் தெரியுமா? - Amnibus seized for ticket high fare collection
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/21-10-2023/640-480-19823968-thumbnail-16x9-bus.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Oct 21, 2023, 2:04 PM IST
கோயம்புத்தூர்: வார விடுமுறை, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக கோவையிலிருந்து சென்னை, பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் பயணிக்கின்றனர். இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில், மத்திய வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக மாநகரில் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் சாலை வரி கட்டாத 18 ஆம்னி பேருந்துகளை இதுவரை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்துள்ளனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மத்திய வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால், சம்பந்தப்பட்ட தனியார் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல, அரசு சார்பில் பண்டிகை தினங்களை முன்னிட்டு, கோவையில் இருந்து 220 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழகம் கோவை லிமிட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.