நீலகிரியில் புகையிலை தீமைகள் குறித்து சூப்பர் விழிப்புணர்வு நாடகம்! - குன்னூர் காவல்துறை ஆய்வாளர் சதீஷ்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நேற்றுகுன்னூர் பேருந்து நிலையம் அருகில் நீலகிரி பிரம்மா குமாரிகள் அமைப்பைச் சேர்ந்தோர், புகையிலை மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து சாலையில் தத்ரூபமாக நாடகம் நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புகையிலை பொருட்கள் ஏற்படுத்தும் போதையினால், ஆண்டுக்கு 60 லட்சம் பேர் உயிர் இழப்பதாகவும் இது இப்படியே தொடர்ந்தால் வரும் காலங்களில் இது 80 லட்சமாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு ஆய்வின் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு சிகரெட் புகைப்பதால் வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை இழப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இத்தகைய ஆபத்தை விளைவிக்கும் புகையிலை பொருட்களின் போதை பழக்கத்தைக் கைவிட்டு பிரம்மா குமாரிகள் அமைப்பின் மூலம் தியானப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குன்னூர் காவல்துறை ஆய்வாளர் சதீஷ் மற்றும் பிரம்மா குமாரிகள் அமைப்பைச் சேர்ந்த ராஜயோகனி, ராஜேஸ்வரி, பி .கே சரசு, உஷா, ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: World Tobacco Day: புகையிலைக்கு அடிமையாகும் சிறுவர்கள்.. ஆய்வு முடிவுகளில் வெளியான அதிர்ச்சி தகவல்!