தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்! பூத்து குலுங்கும் மலர்களை காண ஆசை! - nilgiri news in tamil
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/23-10-2023/640-480-19835950-thumbnail-16x9-ooty.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Oct 23, 2023, 8:00 AM IST
நீலகிரி: தொடர் விடுமுறை தினத்தையெட்டி சர்வதேச சுற்றுலா தளமான ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த வாரம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தசரா, உள்ளிட்ட பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிகளவு குவிந்து வருகின்றனர்.
இதனால் லேம்ஸ்ராக், டால்பின் நோஸ், சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டி உள்ளது. குறிப்பாக குன்னூரில் இருந்து லாம்ஸ்ராக், டால்பின்நோஸ் செல்லும் சாலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட சீசன் ஆரம்பமாகி உள்ளதால் காட்டேரி பூங்கா, சிம்ஸ் பூங்கா போன்ற இடத்தில் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு இருந்த நிலையில். தற்போது அந்த பூக்கள் பூத்துக் குலுங்கி காட்சி அளிக்கின்றன. இதனை காண சிம்ஸ் பார்க் படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.