சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு புதிய யானை.. கும்ப மரியாதையுடன் கோலாகல வரவேற்பு! - தில்லை நடராஜ் கோவில்
🎬 Watch Now: Feature Video
Published : Sep 18, 2023, 11:18 AM IST
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் இருந்து உபயதாரர் சென்னை சி.ஏ.நடராஜர் குடும்பத்தினர் மூலம் யானை வழங்கப்பட்டது. இதை அடுத்து நடராஜர் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் பொது தீட்சிதர்களின் செயலாளர் டி.எஸ்.சிவராமதீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் யானையை கும்ப மரியாதை அளித்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீமந் நடராஜபெருமான் வீற்றுள்ள சித்சபை முன்பு பொது தீட்சிதர்கள் சார்பில் யானைக்கு லட்டு பாவாடை பூஜை மற்றும் கஜ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யானைக்கு சிவகாமலட்சுமி என்ற பெயரிடப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்டளைதாரர் நி.பாலதண்டாயுத தீட்சிதர், பட்டு தீட்சிதர் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். இந்நிகழ்சியில் பொதுமக்கள் ஏரளமானேர் கலந்து கொண்டனர்.
மிக நீண்ட புராண தொடர்புடைய நடராஜர் கோயில், சிதம்பரம் தில்லை நடராஜ் கோயில் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகும், இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு நடராஜர் கோயிலுக்கு நிரந்தர யானை கிடைத்து உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.