‘அமைதியான நதியினிலே ஓடம்’.. கழிவுநீர் ஓடையில் சவாரி செய்த காங்கிரஸ் தலைவர் - the Thamirabarani River
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டின் 'வற்றாத ஜீவநதி' என்று போற்றப்படும் நெல்லை 'தாமிரபரணி' (Thamirabarani River) ஆற்றில் சமீப காலமாக கழிவுநீர் கலப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக, மாநகரப் பகுதிகளில் சரியான திட்டமிடல் இல்லாமல் போடப்பட்ட பாதாள சாக்கடையின் காரணமாக, ஆங்காங்கே கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் தாமிரபரணி ஆற்றில் நேரடியாக கலப்பதாக தெரிகிறது. இது தவிர, பல்வேறு குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் நேரடியாக ஆற்றில் கலக்கின்றன. இதனால், தாமிரபரணி ஆற்றில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து, நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணி மூர்த்திஸ்வரம் தாமிரபரணி ஆற்று பகுதியில் நேற்று (மே 23) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, கழிவுநீர் கலப்பதை தடுக்கத் தவறிய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் ஆற்றுக்குள் கலக்கும் கழிவுநீர் ஓடை மீது அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் வந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் கழிவு நீர் மீது விளம்பர பேனர் விரித்து அதன் மீது அமர்ந்து மாநகராட்சிக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.
மேலும், 'கலக்காதே.. கலக்காதே.. சாக்கடையை தாமிரபரணியில் கலக்காதே.. தண்ணீர் வியாபாரிகளுக்கு துணைபோகாதே..' என தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.