சாத்தப்பட்ட நடை - நயன்தாராவுக்காக திறக்கப்பட்ட தாராசுரம் ஆலய பிரதானக்கதவு
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ்சிவனும் இன்று ( ஏப்.05 ) முற்பகல், விக்னேஷ் சிவனின் குலதெய்வமான தஞ்சை மாவட்டம், கீழவழுத்தூர், காமாட்சியம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அதன் பிறகு இன்று நண்பகல் 01.30 மணியளவில், 4 சொகுசு கார்களில், கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தில் உள்ள உலக பாரம்பரிய சின்னமான யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஐராவதீஸ்வரர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.
அவர்களுடன் நண்பர்கள் 5-க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். கோயில் நடைவழக்கம் போல் நண்பகல் 12.30 மணிக்கு அடைக்கப்பட்டு, பின்னர் மாலை 4 மணிக்கு தான் திறப்பது வழக்கம். இருப்பினும், நடிகை நயன்தாராவிற்காக, கோயில் நுழைவு வாயிலில் உள்ள பிரதானக் கதவு திறக்கப்பட்டது.
சுமார் அரை மணி நேரம் கோயிலுக்குள் இருந்த அவர்கள் மீண்டும் வெளியில் அடைக்கப்பட்டிருந்த கதவைத் திறந்து வெளியே வந்தனர். இது குறித்து உள்ளே சென்றவர்களை கேட்டபோது, அவர்கள் பிரதான மண்டபத்தில் உள்ள பெரிய தூண்களில் இருந்த சிற்பங்களை பார்த்து வியந்ததாகவும், அதனுடன் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதாகவும் சுவாமி கர்ப்பகிரகம் கதவு திறக்கப்படவில்லை என்றும் கூறினர்.
ஆனால், இவர்கள் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை. பின்னர், இக்குழுவினர் திருச்சியை நோக்கி காரில் புறப்பட்டனர். நயன்தாரா, தனது வருகை குறித்த கேள்விகளுக்குக் கூட செய்தியாளர்களுக்குப் பதில் அளிக்காமல் மவுனமாக புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: பைக் ரேஸில் இருந்து இருந்து அஜித் விலகியது ஏன்? - பயில்வான் ரங்கநாதன் கூறிய காரணம்