விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பைக்கர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி! - Narrow escape for young biker in surat viral video
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-10-2023/640-480-19724039-thumbnail-16x9-surat.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Oct 9, 2023, 10:35 PM IST
சூரத்: குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் உள்ள மேம்பாலம் ஒன்றில் இன்று(அக்.9) காலை ஒரு கும்பல் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த ஒருவர் பாலத்தின் வலைவில் திரும்புகையில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக் பாலத்தின் வலது பக்கம் சுவற்றில் மோதியது.
அதன் பின் அவரது இரு சக்கர வாகனம் 50 மீட்டர் தொலைவில் விழுந்தது. அந்த இளைஞர் பாலத்தின் சுவற்றில் மோதிய படி சாலையில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஒருவேளை அவர் பாலத்தில் இருந்து கிழே விழுந்திருந்தால், அவர் இறந்திருப்பார். ஏனென்றால் அந்த பாலம் சுமார் 25 அடி உயரத்தில் இருந்தது. இந்த வீடியோ காட்சியானது அந்த இளைஞரின் இரு சக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த காரின் டேஷ்போர்டில் இருந்து கேமராவில் பதிவாகி உள்ளது.
ஆனால், இது குறித்து காவல் துறையில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. மேலும், இந்த வீடியோவை பார்த்த பின்பு சூரத் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.