நாங்குநேரி விவகாரம்: "மாணவர்கள், பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுங்கள்" - நயினார் நாகேந்திரன் கோரிக்கை! - nainar nagendran requests government

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 12, 2023, 9:42 PM IST

திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் வீட்டில் இருந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது சகோதரியை ஆயுதம் கொண்டு கொடூரமாக தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இவர்களை பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாங்குநேரியில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனையும் வருத்தமும் அளிக்கிறது. இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க வேண்டும். இதுபோன்ற செயல் நடக்காமல் இருக்க அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

நாங்குநேரி பகுதிக்கு ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரை ஏ.எஸ்.பியாக பணியமர்த்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவன் ஊர் பகுதியில், ரேசன் கடை, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பொது இடங்களில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் சாதிய பிரச்சனை இல்லை, ஈகோ பிரச்சனை தான் உள்ளது. தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் பிரச்சினை நடப்பதாக தெரியும் இடத்தை உடனடியாக கண்டறிந்து, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

இந்த விவகாரத்தின் மூலக் காரணத்தை கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை அழைத்து கவுன்சிலிங் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.