இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் இல்லை - விவசாயிகள் கருத்து! - மயிலாடுதுறை மாவட்டம்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 - 2024ஐ வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதற்கு விவசாயிகள் தரப்பில் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ''இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கக்கூடிய பட்ஜெட்டாகவே உள்ளது. இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்ஜெட் ஒதுக்கப்படவில்லை.
இயற்கை விவசாயத்துக்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு என்பது போதுமானது கிடையாது. அதேநேரம் வேளாண் உபபொருட்களுக்கு 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதால், கம்பெனிகளுக்கு மட்டுமே லாபம். விவசாயிகளுக்கு அதனால் பயன் இல்லை. ஏனென்றால், வேளாண் பொருட்கள் தரம் அற்றதாக கொடுக்கப்படும்.
மாப்பிள்ளை சம்பா பற்றி சட்டப்பேரவையில் கூறி இருப்பது நகைச்சுவையாக மட்டுமே இருக்கிறது. அதற்கான முன்னெடுப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. புதுச்சேரி அரசைப்போல விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையைக் கொடுத்து விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும். இந்த பட்ஜெட் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக மட்டுமே இருக்கிறது'' என்றனர்.