திருப்பாவை- திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி - நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் பங்கேற்பு! - La Ganesan
🎬 Watch Now: Feature Video
Published : Sep 17, 2023, 2:14 PM IST
பெரம்பலூா்: மாவட்ட அளவில் நடைபெற்ற திருப்பாவை- திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மணவிகளுக்கு நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் பரிசுகளை வழங்கினார்.
பெரம்பலூா் ராமகிருஷ்ணா ஆன்மிக பண்பாட்டு மையத்தின் சாா்பில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில் உள்ள ராமகிருஷ்ண கல்வி வளாகத்தில் "பாவை விழா” நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவர்களுக்கான திருப்பாவை - திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகளுக்கு அருள்செல்வி என்னும் பட்டத்துடன் முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், 2ஆவது பரிசு ரூ.3ஆயிரம், 3ஆவது பரிசு ரூ.2 ஆயிரம், சிறப்பு பரிசு ரூ.1,000த்தை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளா தேவி, ராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் சிவசுப்ரமணியன் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.