CCTV:வேலூரில் அடுத்தடுத்த 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு! - திருடும் சிசிடிவி வீடியோ
🎬 Watch Now: Feature Video
வேலூர்: கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர், மோட்டூர் பகுதியில் பெருமாள் என்பவர், பேக்கரி கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் லோகநாதன் மற்றும் ஜனார்த்தனன் ஆகிய இருவரும் தனித்தனியாக மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல, இரவு கடையை முடி வீட்டுக்குச்சென்று, இன்று காலை கடையைத் திறக்க வந்த போது பெருமாள் என்பவரின் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து, அதில் வைத்திருந்த பணம் மற்றும் பேக்கரி தின்பண்டங்கள் திருடு போனது தெரியவந்தது.
மேலும் அதே பகுதியில் உள்ள லோகநாதன் மற்றும் ஜனார்த்தனன் ஆகிய இருவர்களின் மளிகைக்கடையின் பூட்டு உடைக்க முயற்சி செய்துள்ளனர். பின்னர், உடனடியாக இதுகுறித்து கே.வி. குப்பம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கபட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மளிகைக் கடையில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆராய்ந்து, அதில் உள்ள 2 மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்தடுத்த 3 கடைகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பேக்கிரி தின்பண்டங்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.