முதியவரின் 20 வருடமாக சேமிப்பு கொள்ளை! - கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ.6 லட்சம் திருட்டு- பதற வைக்கும் CCTV காட்சி! - crime news in tamil
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-11-2023/640-480-19910597-thumbnail-16x9-tpt.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Nov 1, 2023, 10:46 AM IST
|Updated : Nov 1, 2023, 12:39 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே முதியவரின் 20 வருடமாக இன்சூரன்ஸ் சேமிப்பு தொகையான 6 லட்ச ரூபாயௌ கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் அடுத்த சொக்கலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 வயதான முதியவர் சக்தி. கடந்த 20 வருடமாக தான் சேமித்த பணத்தை இன்சூரன்ஸ் போட்டு வைத்துள்ளார். இந்த நிலையில் இன்சூரன்ஸ் முடிவுற்ற நிலையில் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து 6 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்று உள்ளார்.
இவை அணைத்தையும் நோட்டமிட்ட மர்ம கும்பல் சக்தியை பின் தொடர்ந்து வந்துள்ளது. இதனை அறியாமல் சக்தி தனது இருசக்கர வாகனத்தில் பணத்தை வைத்து விட்டு மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்று உள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகன பெட்டியில் வைத்து இருந்த 6 லட்ச ரூபாயை கண்ணிமைக்கும் நேரத்தில் எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடந்த சக்தி சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.