முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..! தடையின்றி கிடைக்கும் தண்ணீரால் விவசாயிகள் மகிழ்ச்சி! - todays news in tamil
🎬 Watch Now: Feature Video
Published : Oct 2, 2023, 12:46 PM IST
தேனி: தமிழகம் - கேரளா எல்லையான தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணைக்கு, நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அணையின் நீர் வரத்து 509 கன அடியாக இருந்த நிலையில், இன்று (அக். 2) காலை 2 ஆயிரத்து 593 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் 121.20 அடி இருக்கின்ற நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 933 கன அடியாகவும் அணையின் இருப்பு 2 ஆயிரத்து 866 கன அடி ஆக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகளுக்கு தேவையான நீர் தடையின்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து விவசாயிகள் நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.