JNUவில் தமிழ் மாணவர் மீது தாக்குதல் - நேரில் சென்ற தருமபுரி எம்.பி. செந்தில் குமார் - டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
🎬 Watch Now: Feature Video
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நேற்றிரவு (பிப்.19) தமிழ்நாடு மாணவர்கள் தாக்கப்பட்டனர். மேலும், அங்கிருந்த தலைவர்களின் படங்கள் உடைக்கப்பட்டன. நாசர் என்ற மாணவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில், தருமபுரி எம்.பி. செந்தில் குமார், தமிழ்நாடு மாணவர்கள் தாக்கப்பட்ட ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்றுள்ளார்.
அங்கு, தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆறுதல் கூறிய நிலையில், பெரியார் படத்தை பரிசாக வழங்கியுள்ளார். இதனைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், பெரியார் படங்கள் எங்கு உடைக்கப்பட்டனவோ அதே இடத்தில் இந்தப் புதிய பெரியார் படத்தை வைத்துள்ளனர். இது குறித்து எம்.பி. செந்தில் குமார், நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்தார். அதில் தமிழ்நாடு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக துணைவேந்தர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடம் பேசியுள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: JNU-வில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் - அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்