Amrit Bharat: அரக்கோணம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகளை துவக்கி வைத்த பிரதமர்!

🎬 Watch Now: Feature Video

thumbnail

வேலூர்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் அரக்கோணம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியினை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் நோக்கம் இந்தியாவில் உள்ள தெற்கு ரயில்வே 25 ரயில் நிலையங்கள் உட்பட 508 ரயில் நிலையங்களை மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உலக தரம் வாய்ந்த வசதிகளுடன் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது ஆகும்.

அந்த வகையில், அழகிய முகப்பு, சுத்தமான காற்றோட்டத்துடன் கூடிய விரிவான காத்திருப்பு பகுதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், பயணிகளின் ஏற்ற வசதிகள், தகவல் அமைப்பு, புதிய நடைமேடைகள், பயணிகள் தங்குமிடங்களை மேம்படுத்தல், சிசிடிவி கேமராக்கள் நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய ரயில் நிலையங்களை மறுசீரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியினை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் துவக்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக அரக்கோணம் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்படுத்துவதற்கான பணியை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். முன்னதாக இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வைக்கப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே சிக்னல் பிரிவு முதன்மை பொறியாளர் சந்தீப் குமார், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் விஜயன் மற்றும் பொதுமக்கள், பள்ளி மானவர்கள் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.