விளையாட்டுத்துறைக்கு ஒடிசாவில் ரூ.1500 கோடி.. இங்கு வெறும் ரூ.25 கோடி தான் - அமைச்சர் உதயநிதி கலாய்! - ஈரோடு இடை தேர்தல்
🎬 Watch Now: Feature Video
சென்னை: போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய, திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்,
"என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு முதல் உரை எழுதியது, மதுரவாயல் தொகுதி தான். நான் பேசியதையெல்லாம் டி. ஆர்.பாலு ஞாபகம் வைத்துள்ளார். அவரது அனுபவம், நினைவாற்றல் குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அவர் பொருளாளராக உள்ளார். ஒடிசாவில் விளையாட்டுத் துறைக்கு பட்ஜெட் ரூ.1,500 கோடி ஒதுக்குகிறார்கள். தமிழ்நாட்டில் ரூ.25 கோடி தான். அதிக நிதி பட்ஜெட்டில் ஒதுக்குமாறு அமைச்சர் டி.ஆர். பாலு அவர்கள் அவரது நண்பரான முதலமைச்சரிடம் பரிந்துரை செய்ய வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். அதற்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு பகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார். மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் டி. ஆர். பாலு அமைச்சர், அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டுப் பேசினார்கள்.