மரியாதைக்கு மல்லுக்கட்டிய அப்பாவு, கே.என்.நேரு..! நெல்லையில் சுவாரஸ்யம்.. - speaket appavu

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 26, 2023, 7:08 PM IST

திருநெல்வேலி: நடிகர் வடிவேலு பாணியில் நெல்லையில் அமைச்சர் மற்றும் சபாநாயகர் இடையே நிலவிய போட்டியால் சுவாரஸ்யம் கூடியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நெல்லை வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெற்ற அரச நிகழ்ச்சியில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். 

முன்னதாக வள்ளியூரில் 12.13 இலட்சம் ரூபாய் செலவில் நவீன மையமாக்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் கே.என் நேரு வருகை தந்திருந்த நிலையில் அவரை வரவேற்க ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தம்நாடு சபாநாயகருமான அப்பாவு அங்கு தயார் நிலையில் இருந்தார். அமைச்சர் நேரு காரில் இருந்து இறங்கியவுடன் அவருக்கு பொன்னாடை போடுவதற்கு சபாநாயகர் முயன்றார். 

அப்போது நேரு அப்பாவுவின் கையை பிடித்து தனக்கு போட வந்த பொன்னாடையை சபாநாயகருக்கு போட முயன்றார். ஆனால் சபாநாயகர் அதை ஏற்காமல் அமைச்சருக்கு பொன்னாடை போட முயன்றார். இருவரும் இரு கையை உயர்த்தியபடி பொன்னாடையுடன் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தடுத்துக் கொண்டிருந்தனர். இருவரிடைய யாருக்கு யாரு பொன்னாடை போடுவது என்பதில் சில நிமிடங்கள் போட்டி நிலவியது. 

குறிப்பாக வயதில் மூத்தவர் என்ற அடிப்படையில் சபாநாயகருக்கு தன் கையால் பொன்னாடை போட வேண்டும் என முயன்றார், அதேசமயம் மாவட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் அமைச்சர் என்ற முறையில் கே.என்.நேருவுக்கு மரியாதை கொடுக்க சபாநாயாகர் முயன்றார் இறுதியில் பொன்னாடையை அமைச்சர் நேரு அப்பாவுவிற்கு அணிவித்தார். இதை வேடிக்கை பார்த்த திமுகவினர் ஒரு பொன்னாடைக்கு இவ்வளவு அக்கப்போரா என்று முணுமுணுத்து கொண்டனர். 

மேலும் இதை பார்க்கும் போது திரைப்படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் வடிவேலு தன்னை சந்திக்கும் தனது நண்பரை இருக்கையில் அமரும்படி கூறுவார். ஆனால் இந்த நண்பர் பதிலுக்கு நீ உட்காரு என வடிவேலுவை கை காட்டுவார். இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் உட்காரும்படி கூறுவார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பெரிய கலவரமே ஏற்படும். 

இங்கே சபாநாயகர் அமைச்சரிடைய ஏற்பட்ட பொன்னாடை போட்டியும் தகராறில் போய் முடிந்து விடுமோ என்று ஒரு நிமிடம் திமுகவினர் அஞ்சினர். ஆனால் இருவருமே கடைசிவரை சிரித்தபடியே போட்டி போட்டுக் கொண்டனர். பின்பு 12.13 இலட்சம் மதிப்பீட்டில் வள்ளியூர் பேரூந்து நிலையம் நவீன மையமாக்கும் பணியினை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இன்று மாலை நெல்லையில் மாநகராட்சி சார்பில் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பணிகளை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு தமிழ் மொழி பற்றி எதுவும் தெரியாது - அமைச்சர் பொன்முடி விமர்சனம்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.