ஆட்சியராக பொறுப்பேற்கும் முன் அபயாம்பிகை யானையிடம் ஆசி பெற்ற மயிலாடுதுறை கலெக்டர் - Mayuranathar Temple
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டின் கடைசி 38-வது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக, திருவள்ளூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பொறுப்பு வகித்த ஏ.பி.மகாபாரதி பொறுப்பேற்றார். பொறுப்பேற்கும் முன்பு தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறையில் உள்ள பிரசித்திபெற்ற மயூரநாதர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து கோயில் யானை அபயாம்பிகையிடம் ஆசிபெற்றார்.
அப்போது கோயில் வளாகத்தில் இருந்த நரிக்குறவர் சமுதாய மக்கள் புதிய மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதனை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் இணைந்து மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை முன் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். புதியதாக பொறுப்பேற்கும் ஆட்சியரின் இந்தச் செயல் பொதுமக்களிடையே ஆட்சியர் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.