சூரிய ஒளிக்கதிரை குவித்து பெரியார் படத்தை வரைந்து அசத்திய நபர்! - periyar drawing video
🎬 Watch Now: Feature Video
Published : Sep 17, 2023, 6:53 PM IST
மயிலாடுதுறை: பெரியாரின் 145-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் பெரியாரின் உருவப்படத்தை சூரிய ஒளிக்கதிர் கொண்டு, பூதக்கண்ணாடியால் மரப்பலகையில் குவித்து பர்னிங் வுட் ஆர்ட் படைத்து அசத்தியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர், விக்னேஷ். இவர் தனது திறமைகளால், பல்வேறு ஓவியங்களை சூரிய ஒளிக்கதிர் கொண்டு, பூதக்கண்ணாடியால் மரப்பலகையில் குவித்து வரைந்து வருகிறார். இத்தகைய சன் பர்னிங் வுட் ஓவியத்தை (Sun Burning Wood Art) ஆசிய கண்டத்திலேயே இவர் ஒருவர் மட்டும்தான் வரைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது பெரியாரின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது திருவுருவப் படத்தை தனது திறமைகளால் சூரிய ஒளிக்கதிர் கொண்டு வரைந்து அசத்தியுள்ளார், விக்னேஷ். தற்போது இவர் வரைந்த ஓவியத்தை, இவரே வீடியோ ஒளிப்பதிவு செய்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து இந்த ஓவியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.