கோவையில் 10 நாட்களுக்கு முன்பு போடப்பட்ட சாலையில் புதைந்த லாரி! - coimbatore news
🎬 Watch Now: Feature Video
Published : Oct 17, 2023, 1:05 PM IST
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு போடப்பட்ட புட்டுவிக்கி சாலையில் லாரி புதைந்து விபத்துக்குள்ளனதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கோவை மாநகராட்சி சார்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு புட்டுவிக்கி பகுதியில் புதிதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு (அக்-15) கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்த காரணத்தால், அந்த சாலை லேசாக சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை அவ்வழியாக செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் முன்புற சக்கரம் சாலையில் புதைந்து சிக்கியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் போடப்பட்ட புட்டுவிக்கி சாலை தரமற்ற முறையில் போடப்பட்டதால், லேசான மழைக்கு கூட தாக்கு பிடிக்க முடியாமல் சேதமடைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் அவ்வழியாக சென்ற லாரி சிக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுத்து தரமான சாலையை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.