தென்காசி டாஸ்மாக் கடையில் கூடுதல் பணம் வசூல் - விற்பனையாளர் கூறிய பலே காரணம்?
🎬 Watch Now: Feature Video
தென்காசி: வீரகேரளம்புதூர் தாலுகா பகுதிக்கு உட்பட்ட பரன்குன்றாபுரம் என்ற பகுதியில் அரசு மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு மதுபானம் வாங்கச் சென்ற ஒரு நபர் கடைக்குச் சென்று பீர் கேட்டுள்ளார். அப்போது, பீர் பாட்டிலிருந்த விலையை விடக் கூடுதலாக பத்து ரூபாய் மதுபான கடையின் விற்பனையாளர் வாங்கியுள்ளார்.
உடனே, மதுபானம் வாங்க சென்ற நபர் பத்து ரூபாய் ஏன் கூடுதல் எடுக்கிறீர்கள், அரசு தான் கூடுதலாகப் பணம் வசூல் செய்யக்கூடாது எனக் கூறியிருக்கிறார்களே என அவர் கேட்க, ‘அவர்கள் சொல்லுவார்கள் நாங்கள் எப்படி கேட்க முடியும்’ என விற்பனையாளர் பதிலளித்தபடி, பத்து ரூபாய் திருப்பி கொடுக்காமல் தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
பீர் வாங்க சென்ற நபர் தனது பத்து ரூபாயை திருப்பிக் கொடுங்கள் என கேட்க மின்சார கட்டணம் எல்லாம் உள்ளது என விற்பனையாளர் கூறியுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், அரசு மதுபான கடைகளில் கூடுதலாகப் பணம் வசூல் செய்யக் கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிவருகிறார்.
இருந்தபோதிலும், பல்வேறு மதுபான கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்து தான் வருகின்றனர். இதனை எதிர்த்து கேள்வி கேட்டால் மிரட்டுவதாகவும் மது பிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.17 இருந்த அக்கவுண்டில் திடீரென வந்த ரூ.100 கோடி.. இளைஞர் இன்ப அதிர்ச்சி!