Video: சிறப்பு உதவி ஆய்வாளரை கண்டித்து காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு - திருச்சி மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
திருச்சி: மணப்பாறை பகுதி பொதுமக்கள் தங்களின் அசல் பத்திரங்கள் காணாமல் போனது தொடர்பாக மணப்பாறை காவல் நிலையத்தில் பல மாதங்களுக்கு முன் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டு வந்துள்ளது.
இதேபோல் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு வழக்கறிஞர் குழந்தைவேல் தனது வழக்காடி ஒருவருக்காக அசல் பத்திரம் காணாமல் போனது தொடர்பாக மணப்பாறை காவல் நிலையத்தை அணுகியுள்ளார். மூன்று மாதங்களாகியும் அதற்கான ஒப்புதலைப் பெற முடியாமல் வழக்கறிஞர் குழந்தைவேல் பல்வேறு காரணங்களால் அலைக்கழிக்கப்பட்டு உள்ளார்.
இதனால் கடும் கோபமடைந்த வழக்கறிஞர் குழந்தைவேல் மற்றும் அவருடன் பணியாற்றும் சக வழக்கறிஞர்கள் காவல் நிலையத்திற்குள் அமர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளரை கண்டித்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பதறிப் போன காவல்துறையினர் அவரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி ஒப்புதல் சான்றிதழை உடனடியாக கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியேறினர். சிறப்பு உதவி ஆய்வாளரின் மெத்தனப்போக்கை கண்டித்து வழக்கறிஞர்கள் காவல்நிலையத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரை கிலோ புளிக்கு அடிதடியா! கடையேவே துவம்சம் பண்ணிட்டீங்களடா.. திருச்சியில் களேபரம்