மக்களை நோக்கி ரூ.500 நோட்டுகளை வீசிய டி.கே. சிவக்குமார் - கர்நாடகாவில் காசு வீசிய
🎬 Watch Now: Feature Video
மாண்டியா: கர்நாடகா சட்டப் பேரவை தேர்தலையொட்டி மாண்டியா பகுதியில் பரப்புரைக்கு சென்றிருந்த காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் மக்கள் மத்தியில் ரூ.500 நோட்டுகளை வீசியது சர்ச்சையை கிளப்பியது.
கர்நாடகா சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மாண்டியாவில் பரப்புரை செய்து வருகிறார். முன்னதாக பெவினஹள்ளி அருகே நடந்த பேரணியில் டி.கே. சிவக்குமார் கலந்துகொண்டார்.
அப்போது, பரப்புரை வாகனத்தின் மேல் நின்று கொண்டு, வாக்கு சேகரித்தார். இதனிடையே அவர் ரூ.500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் மத்தியில் அள்ளி வீசியுள்ளார். இந்த நோட்டுக்களை எடுக்க மக்கள் முட்டி மோதிக்கொண்டனர். இவரது செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநில சட்டப் பேரவை தேர்தல் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மொத்தமாக 224 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அதேபோல 2019ஆம் ஆண்டு நடந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக 12 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் வென்றது.