நாட்டுப்புற கலைஞர்களுக்கு கவிச்சக்கரவர்த்தி விருது வழங்கும் விழா! - Naatupurapaadal
🎬 Watch Now: Feature Video
தென்காசி: அழகு நாச்சியாபுரம், ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் வகையில், கவிச்சக்கரவர்த்தி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சங்கரன்கோவில் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான கலந்து கொண்டனர்.
நாட்டுப்புற கலை என்பது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக பெரும் வளர்ச்சி அடைந்து காணப்பட்டது. இந்த நாட்டுப்புற கலை மூலமாக பல்வேறு திறமைகளையும் மற்றும் பல்வேறு விதமான கிராமங்களில் நேரடியாக சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இந்த நாட்டுப்புற கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் நாட்டுப்புறக் கலைகள் மூலமாக நாடகம், மேடைப்பேச்சு போன்ற பல்வேறு விதமான நிகழ்ச்சிகளும் இந்த நாட்டுப்புற கலைஞர்கள் மூலமாக நடைபெற்றன.
தற்போது உள்ள காலகட்டங்களில் நாட்டுப்புறக்கலை அழிந்து வருவதால் அவர்களை வளர்க்கும் விதமாக, கௌரவிக்கும் வகையில் விருது வழங்க இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டுப்புற கலை ஒருபுறம் அழிந்து வரும் நிலையில், நாட்டுப்புற கலையை வளர்க்கும் விதமாக பல்வேறு இடங்களில் இதுபோன்று நடைபெற்று வருகிறது. தற்பொழுது உள்ள டிஜிட்டலில் மற்றும் சோசியல் நெட்வொர்க் அதிகமாக வளர்ந்து வருவதால் நாட்டுப்புற கலை அதிகமாக நலிவுற்று பல்வேறு இடங்களில் காணப்படுகிறது.
இதில் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகு நாச்சியார் புறம் கிராமத்தில் நதிகள் அறக்கட்டளை சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கும்மி பாடல், வில்லிசை பாடல் உள்ளிட்ட கலைஞர்களுக்கு கவிச்சக்கரவர்த்தி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஆனந்தன் கலந்து கொண்டு நாட்டுப்புற கலைஞர்களுக்கான கவி சக்கரவர்த்தி விருதினை வழங்கி கௌரவித்தார். இதில் தென்காசி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.