கர்நாடகா பந்த்: பெங்களூரு செல்லும் தமிழக வாகனங்களை எச்சரித்து அனுப்பும் போலீஸ்! - tamilnadu busus to bengaluru
🎬 Watch Now: Feature Video
Published : Sep 29, 2023, 10:28 AM IST
கிருஷ்ணகிரி: கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு திறப்பதை எதிர்த்து கன்னட அமைப்பினர் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பெங்களூரு முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் அரசு பேருந்துகள் (BMTC) வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கட்டுள்ள நிலையில் தனியார் பேருந்துகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையான ஜூஜூவாடி வரை தமிழ்நாடு நகர பேருந்துக்கள் இயக்கப்படுகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் விழுப்புரம், காஞ்சிபுரம், சேலம் ஆகிய கோட்டங்களை சேர்ந்த 430 பேருந்துகள் ஒசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
மாநில எல்லையில் தமிழ்நாடு போலீசார், தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனங்களை கர்நாடகா செல்ல அனுமதிக்காமல் எச்சரித்து மீண்டும் திருப்பி அனுப்பி வருகின்றனர். மாநில எல்லையில் 20 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.