சிவப்பு சேலை, குங்குமம் சகிதமாக 100 நாள் திட்டப்பணியாளர்களுடன் செல்ஃபி எடுத்த கனிமொழி எம்.பி.! - கீதா ஜீவன்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: எப்போதும் வென்றான், தளவாய்புரம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்களை, திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சந்தித்தார்.
இதையும் படிங்க: லூர்து பிரான்சிஸ் உடலுக்கு கலெக்டர் அஞ்சலி - VAO சங்கம் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்!
அப்போது, கனிமொழி அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்பு அங்கிருந்த பெண்களிடம் ஊதியம் முறையாகவும் குறித்த நேரத்திலும் கொடுக்கப்படுகிறதா என்பது குறித்தும், பணியில் நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியுடன், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது எப்போது இல்லாதவகையில் சிவப்பு சட்டை அணிந்திருந்த கனிமொழி, குங்குமம் இட்டு, மாலை அணிந்திருந்தார்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸ் முற்றுகை!