தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியா? - எம்.பி.கனிமொழி ‘பளீச்’ பதில்! - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை பேரூராட்சி பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் 8.41 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகளின் கீழ் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட உள்ளது. இத்திட்டத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அடிக்கல் நாட்டி, திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
இவ்விழாவில், மீன்வளம் -மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி பேசுகையில், “பனை சார்ந்த தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தமிழக முதல்வர் அறிவித்தபடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விரைவில் அதற்கான அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்” எனக் கூறினார். திமுக ஆட்டம் 48 மணி நேரத்தில் முடிவுக்கு வரும் என எச்.ராஜாவின் ட்விட்டர் பதிவு குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி, “அவருக்கு கனவு காண நேரம் உள்ளது” என்று தெரிவித்தார்.