அண்ணாவின் 115வது பிறந்தநாள்; உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கனிமொழி! - Minister Anitha Radhakrishnan
🎬 Watch Now: Feature Video
Published : Sep 15, 2023, 2:23 PM IST
தூத்துக்குடி: முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 115வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரின் உருவ சிலைக்கு கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதராஸ் மாகாணத்தின் கடைசி முதலமைச்சரும், தமிழகத்தின் முதல் முதலமைச்சருமான அண்ணாத்துரையின் 115வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள அண்ணாதுரையின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் திமுகவின் துணைத் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு, அண்ணாதுரையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.