திருத்தணி கந்த சஷ்டி திருவிழா; முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் இலட்சார்ச்சனை! - thiruvallur
🎬 Watch Now: Feature Video
Published : Nov 15, 2023, 10:49 AM IST
திருவள்ளூர்: திருத்தணியில் நேற்று உற்சவர் சண்முகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் இலட்சார்ச்சனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில், முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5ஆம் படை கோயிலாகும். இந்த கோயிலில் கந்த சஷ்டி, இலட்சார்ச்சனை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. நேற்று அதிகாலை மூலவர் முருகப் பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
மேலும் கால சந்தி பூஜை, சிறப்பு சாந்தி பூஜையும் செய்யப்பட்டதையடுத்து தங்க கவச அலங்காரம், தங்கவேல், தங்க சேவல் கொடி வேல் ஆகியவை அணிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்ட நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மலைக் கோயிலில் உள்ள காவடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் சண்முகப் பெருமானுக்கு திருநீர், பால், தயிர், தேன், கதம்ப பொடி ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான இலட்சார்ச்சனை நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் சிறப்பு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதற்காக பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்று அரோகரா..அரோகரா.. என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.